ரூ. 9999 விலையில் ஆப்பிள் 3-ஜி எஸ் ஸ்மார்ட் ஐபோனை வழங்கும் ஏர்செல்

Loading...

ரூ. 9,999 விலையில் ஆப்பிள் 3-ஜி-எஸ் ஸ்மார்ட் ஐபோனை வழங்கும் ஏர்செல்ஆப்பிளின் ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ஏர்செல் நிறுவனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது பற்றிய தகவல்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். அதாவது ஐபோன்-4 ஸ்மார்ட்போனுக்கும் முந்தைய வெர்ஷனான ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையாக ரூ. 9,999 விலையில் ஏர்செல் நிறுவனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனுக்கு செய்யப்பட்டிருக்கும் இந்த விலை குறைப்பு வசதி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்றும் கூறப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் இந்த ஐபோன்-3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனை ரூ. 20, 908 விலையில் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த விலை குறைப்பை விடவும், ஏர்செல் நிறுவனத்தின் விலைகுறைப்பு இன்னும் ஆச்சர்யத்தினை கொடுக்கிறது.

ஏர்செல் நிறுவனம் வழங்கும் இந்த ஆப்பிள் ஐபோன்-3ஜி-எஸ் ஸ்மார்ட்போனிற்கு முன்பணமாக ரூ. 3,000 செலுத்த வேண்டும். ஆனால் இந்த முன்பணத்தில் 3ஜி அளவில்லா சேவையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏர்செல் வலைத்தளத்திலும் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply