ரினால்ட்டின் புதிய 800சிசி கார் பல புதிய அம்சங்களுடன்

Loading...

ரினால்ட்டின் புதிய 800சிசி கார் பல புதிய அம்சங்களுடன்ஆல்ட்டோ, இயானுக்கு போட்டியாக புத்தம் புதிய 800சிசி காரை ரினால்ட் தயாரித்து வருகிறது. சென்னையில் உள்ள ஆராய்ச்சி மையத்தில்தான் இந்த புதிய கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நம் நாட்டு மார்க்கெட்டில் 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை சிறிய ரக கார்கள்தான் விற்பனையாகின்றன. இந்த மார்க்கெட்டில் தற்போது மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான், செவர்லே ஸ்பார்க் ஆகிய கார்கள் கோலோய்ச்சி வருகின்றன.

பெரும் வர்த்தக வாய்ப்பு உள்ள இந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட் மீது அனைத்து கார் நிறுவனங்களுக்கும் கண் இருக்கிறது. ஆனால், அதிலிருக்கும் சவால்களை கருதி சிறிய கார் திட்டத்தை கையிலெடுக்க அச்சப்படுகின்றன. இந்த நிலையில், பிரெஞ்சு கார் நிறுவனமான ரினால்ட் நிறுவனம் துணிந்து புதிய 800சிசி காரை வடிவமைத்து வருகிறது.

‘ஏ என்ட்ரி’ என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான 800சிசி எஞ்சின் ‘பி4ஏ’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. குறைந்த விலை கார்களை வடிவமைப்பதில் கைதேர்ந்த தனது வடிவமைப்பு பிரிவு நிபுணரான ஜெரார்டு டெட்டோர்பட் தலைமையில் மூன்று நிபுணர்கள் அடங்கிய குழு இந்த காரை வடிவமைத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், இந்த புதிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் 800சிசி எஞ்சின் நகர்ப்புறங்களில் ஓட்டும்போது லிட்டருக்கு 20கிமீ மைலேஜ் தரும் என்று ரினால்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, லிட்டருக்கு 24 கிமீ முதல் 26 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில் இந்த எஞ்சினுக்கு அராய் சான்றை பெறவும் ரினால்ட் இலக்கு வைத்துள்ளது.

வரும் 2014ம் ஆண்டில் இந்த புத்தம் புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர ரினால்ட் திட்டமிட்டுள்ளது. சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் இந்த புதிய 800சிசி காரை வளரும் மார்க்கெட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ரினால்ட் திட்டமிட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply