ரினால்ட்க்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த டஸ்ட்டர் புக்கிங்

Loading...

ரினால்ட்க்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த டஸ்ட்டர் புக்கிங்டஸ்ட்டர் வரவு ரினால்ட்டுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு சில வாரங்களில் 10,000 புக்கிங்குகளை தாண்டியுள்ளது டஸ்ட்டர்.

சரியான விலையில் டஸ்ட்டர் எஸ்யூவியை ரினால்ட் களமிறக்கியதே அமோக வரவேற்பு பெற்றுள்ளதற்கு காரணம். மேலும், சிறந்த வடிவமைப்பு,வசதிகளும் டஸ்ட்டர் பக்கம் கவனத்தை திசை திருப்பியுள்ளது.

டஸ்ட்டர் புக்கிங் அதிகரித்து வருவதையடுத்து, சென்னை ஆலையில் டஸ்ட்டரின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது ரினால்ட். இதற்கான நடவடிக்கைகளை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியாளர்களுக்கு இடம் கொடுத்து விடாத வகையில், வாடிக்கையாளர்களை நீண்ட நாட்கள் காத்திருக்க விடாமல் உடனே டெலிவிரி கொடுப்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ரினால்ட்.

சென்னையில் டஸ்ட்டரின் பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.8.46 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் பேஸ் மாடல் ரூ.9.39 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply