ராகி சேவை உப்புமா

Loading...

ராகி  சேவை உப்புமா
தேவையானவை:
ராகி மாவு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெறும் கடாயில் ராகி மாவை வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதனுடன் கை பொறுக்கும் அளவு சூடான வெந்நீர் விட்டு பிசைந்து இடியாப்ப அச்சில் பிழிந்து, ஆவியில் வேகவிடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆவியில் வேக வைத்த ராகி சேவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:
விரும்பினால் காய் கறிகள் சேர்த்து வதக்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN