ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி

Loading...

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளிதக்காளியில் நல்ல ஊட்ட சத்துக்களும் உற்சாகம் தரும் வேதிப் பொருட்களும் அதிக அளவில் உள்ளன.
தக்காளியில் உள்ள ஆல்பாலிப்போயகிக் அமிலம் சர்க்கரையை சத்துப் பொருளாக மாற்ற உடலுக்கு உதவி செய்கிறது.
மேலும் ரத்த நாளங்களை சுத்திகரித்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் விழிக்கோளாறு வராது காக்கிறது. மூளை மற்றும் நரம்புத் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.
தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” சத்து தக்காளிக்கு சிகப்பு வண்ணத்தை தருவதாக அமைகிறது. அதுமட்டுமின்றி புத்துணர்வு தரும் வேலையையும் செய்கிறது.
தக்காளியில் உள்ள “காலின்” என்னும் சத்து தூக்கத்தைத் தூண்டுவதற்கும், தசைகளின் அசைவிற்கும், படிப்பதற்கும் படித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. இந்த “கோலின்” சத்து செல்களின் கட்டமைப்புக்கு உதவுவதோடு நரம்பு வழி மின் கடத்தலுக்கும் உணவிலிருந்து கொழுப்புச் சத்தை உறிஞ்சுவதற்கும், நீண்டகால வீக்கத்தைக் கரைப்பதற்கும் உதவுகிறது.
தக்காளியை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியும், தோலும் அமைவதோடு சக்தியை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
தக்காளியில் அடங்கி இருக்கும் அபரிமிதமான விட்டமின் ‘சி’ சத்துக்களும் “ஆன்டி ஆக்ஸிடென்ட்” களும் உடலில் தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” என்னும் சத்து “புரோஸ்டேட்” புற்றுநோயை வரவிடாது தடுக்கிறது. இளைஞர்கள் தக்காளியை தாராளமாகச் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள “பீட்டர் கேரோட்டின்” என்னும் சத்து ஆரம்ப நிலையிலேயே புரோஸ்டேட் புற்று நோயை தடுத்து நிறுத்துகிறது.
தக்காளியிலுள்ள “பீட்டாகேரோட்டின்” மற்றும் உயர்ரக நார்ச்சத்து ஆகியவை மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்க வல்லவை ஆகும். மலச்சிக்கலையும் போக்க உதவுகின்றன.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கக் குறைவான உப்புச்சத்து உள்ள உணவு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பொட்டாசியம்” சத்து அதிகமாக எடுத்துக் கொள்வது இதய நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.
தக்காளியில் அடங்கியிருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து மாரடைப்பை தடுப்பதோடு, தசை அழிவை தடுப்பதோடு எலும்புகளின் பலத்தை அதிகப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்கள் ஏற்படாவண்ணம் காக்கிறது.
தக்காளியில் உள்ள போலிக் அமில சத்து கருவுற்ற மாதர்களுக்கு நல்ல சத்தூட்டமாகவும் குழந்தையின் நரம்பு மண்டலத்துக்கு மிக்க பலம் தருவவதாகவும் அமைகிறது. போலிக் அமிலம் மன உளைச்சலையும் போக்க உதவுகிறது. நல்ல மனோ நிலை, தூக்கம், பசி ஆகியவையும் உண்டாகின்றன.
நவீன ஆய்வுகள் தக்காளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் மாதர் தம் மார்பகப் புற்று நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கிறது.
இரண்டொரு தக்காளியை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்து சாறாக்கி வடிகட்டி சர்க்கரை சிறிது சேர்த்துக் குடிப்பதால் மேக நோய்கள், சிறுநீர் எரிச்சலோடு வெளியேறுதல், வீக்கம் முதலிய துன்பங்கள் தொலைந்து போகும்.
தொடர்ந்து ஓரிரு மாதங்களுக்கு 2 தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் கொழுத்துப் பருத்த உடல் எடை குறையும்.
தக்காளிப் பழத்தின் பசை ஓர் சிறந்த முகப் பூச்சுக்கான அழகு சாதனப் பொருட்களாகவும் பயன்தருகிறது.
அன்றாடம் ஒரு டம்ளர் தக்காளி சாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய வாழ்வுக்கு அதிலுள்ள லைக்கோபின் சத்து அடிகோலுகிறது.
தக்காளிச்சாறு சிறிது எடுத்து முகத்தில் பரவலாகப் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்தின் சருமம் பொலிவு அடையும். மென்மையும் நல்ல வண்ணமும் பெறுவதோடு முகச்சுருக்கங்கள் பறந்து போகும்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் தக்காளியை எவ்வகையிலேனும் உணவுடன் சேர்த்துக் கொள்ள தாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் லைக்கோபின் என்னும் சத்து அதிக அளவில் குழந்தைகளுக்குக் கிடைக்க செய்கின்றனர்.
இதனால் தாய்ப்பால் குடிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் புற்று நோய் வருவதற்கான ஆபத்துக்கள் குறைகின்றன.
தக்காளி தாராளமாகப் பயன்படுத்தும் போது எலும்புகளுக்கு பலமும் கிடைக்கிறது. ஏனெனில் தக்காளியில் விட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.
தக்காளி ஓர் சாதாரணமான ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவுக்கான பொருளாகிறது. ஒப்பற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்றாலும் சிறுநீரகம் பழுதுபட்டவர்கள் மட்டும் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்தை மனதில் கொண்டு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply