யம்மி ஜாமுன்

Loading...

யம்மி ஜாமுன்
தேவையானவை:

ஸ்கிம்டு பால் பவுடர் – 2 கப்
மைதா – ஒரு கப்
விப்பிங் கிரீம் (பவுடர்) – ஒரு கப்
பால் – ஒரு கப்
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
சர்க்கரை – 3 கப்
தண்ணீர் – 7 கப்
எண்ணெய் – பொரித்தெடுக்க


செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஸ்கிம்டு பால் பவுடர், மைதா, விப் க்ரீம், பேக்கிங் பவுடர், பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை இருபது நிமிடம் ஊற விடவும்.

சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.

ஊறிய மாவை நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து ஓவல் வடிவம் அல்லது உருண்டை வடிவம் என விருப்பமான வடிவில் உருட்டிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் உருண்டைகளை சிவக்க பொரித்தெடுக்கவும்.

பொரித்தெடுத்த உருண்டைகளை சூடான பாகில் போட்டு ஊற விடவும்.

சுவையான யம்மி ஜாமூன் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply