மொபைல்களில் அவரச உதவிக்கான பட்டன் கட்டாயம் மத்திய அரசு

Loading...

மொபைல்களில் அவரச உதவிக்கான பட்டன் கட்டாயம் மத்திய அரசுஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரிப்பதை இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாவது, தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக தான், பெண்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தாமல் வேறு என்ன சிறப்பான காரியத்துக்கு அதை நாம் பயன்படுத்த போகிறோம்.

வரும், 2017, ஜனவரி, 1 முதல், அவசர உதவி தேவைப்படும்போது, எச்சரிக்கை விடுக்கும், ‘பட்டன்’ வசதியுடன் மொபைல்போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதாவது, மொபைலில் உள்ள எண், 5 அல்லது, 9ஐ, தொடர்ந்து அழுத்தும்போது, அந்த மொபைல் எண் உள்ளவருக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply