மொச்சை பொரியல்

Loading...

மொச்சை பொரியல்
தேவை­யான பொருட்கள் :

மொச்சை – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
வெ.பூண்டு – 2 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு.


தாளிப்பதற்கு :

சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


செய்­முறை :

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்

பின் அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து, அதில் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து மசாலாவானது மொச்சையில் ஒன்று சேர நன்கு பிரட்டி இறக்கினால், மொச்சை பொரியல் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply