மைகரோமேக்ஸ் ஃபன்புக் மற்றும் சென் டேப்லட்கள் இதில் எது சிறப்பானது

Loading...

மைகரோமேக்ஸ் ஃபன்புக் மற்றும் சென் டேப்லட்கள்  இதில் எது சிறப்பானதுவாடிக்கையாளர்கள் இப்போது அதிகம் டேப்லட்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் ஏராளமான டேப்லட்கள் எலக்ட்ரானிக் சந்தையில் குவிய துவங்கி விட்டது என்று கூறலாம். இதனால் எந்த டேப்லட் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் என்பதை ஒரு சிறிய ஒப்பீட்டின் மூலம் பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் ஃபன்ப்ரோ மற்றும் சென் அல்ட்ரா டேப் ஏ-100 என்ற டேப்லட்கள் பற்றிய ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு டேப்லட்கலுமே ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டிருக்கும்.

ஃபன்புக் ப்ரோ டேப்லட் 10.1 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதன் மூமல் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இந்த மைக்ரோமேக்ஸ் டேப்லட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அல்ட்ரா டேப் ஏ-100 டேப்லட் 7 இஞ்ச் திர வசதியினை கொண்டதாக இருக்கும். இதன் திரை 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

சிறப்பான இயங்குதளம் இருப்பதை விடவும், அந்த இயங்குதளம் சிறப்பாக செயல்பட பிராசஸரும் தேவை என்பது மிக அவசியமான ஒன்று. இதை பொருத்த வரையில் இந்த இரண்டு டேப்லட்களும் ஒரு பிராசஸரினை கொடுக்கும். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும்.

ஃபன்புக் ப்ரோ மற்றும் அல்டரா ஏ-100 டேப்லட்கள் முகப்பு கேமராவினை வழங்கும். ஃபன்புக் ப்ரோ 0.3 மெகா பிக்ஸல் கேமராவினை மற்றும் அல்ட்ராடேப் ஏ-100 டேப்லட் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். இதனால் இந்த டேப்லட்களில் வீடியோ காலிங் வசதி எளிதாகிறது.

அல்ட்ராடேப் ஏ-100 டேப்லட் 4 ஜிபி மெமரி வசதியினையும், ஃபன்புக் ப்ரோ 8 ஜிபி மெமரி வசதியினை கொண்டதாக இருக்கும். 3ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசிதியினை பெறுவது டேப்லட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இந்த டேப்லட்களில் 3ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதியினை எளிதாக பயன்படுத்த முடியும்.

ஃபன்புக் ப்ரோ டேப்லட் 5,600 எம்ஏஎச் பேட்டரி வசதியினையும், அல்ட்ராடேப் ஏ-100 டேப்லட்டில் 2,800 எம்ஏஎச் பேட்டரியினை பெறலாம். இதன் விலை பற்றிய விவரமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ ரூ. 9,999 விலையினையும், சென் அல்ட்ராடேப் ரூ. 6,199 விலையினையும கொண்டதாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply