முளை தானிய சுண்டல்

Loading...

முளை தானிய சுண்டல்
தேவையானவை:
கோதுமை – ஒரு கப், பச்சைப் பயறு, கொண்டைக்கடலை – தலா கால் கப், வெங்காயம் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முதல் நாள் கோதுமையை ஊறவிட்டு மறுநாள் மெல்லிய துணியில் முளை கட்டவும் (முளைக்க இரண்டு நாட்கள் ஆகும்). அன்றைய தினம் பச்சைப் பயறு, கொண்டைக் கடலையை ஊற வைத்து மறுநாள் முளை கட்டவும்.
மூன்றாவது நாள், முளைத்த அனைத்து தானிய வகைகளை வேகவிடவும். பின்பு, ஒரு அடி கனமான கடாயில் எண்ணெயைக் காயவிட்டு… வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி… உப்பு, முளை கட்டிய தானியங்கள் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
இது ஒரு ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply