முதுமை தோற்றத்தைத் இல்லாதொழிக்க

Loading...

முதுமை தோற்றத்தைத் இல்லாதொழிக்கபெர்ரிப் பழங்கள் சருமத்திற்கும், உடலுக்கும் மிகவும் நல்லது. மேலும் இந்த பழங்கள் சூப்பர் உணவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் தான் இது சருமத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக சருமத்தை பொலிவோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள, இத்தகைய பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகள் போட்டால், நல்ல பலன் உடனே கிடைக்கும்.
மேலும் இந்த பெர்ரிப் பழங்களைக் கொண்டு, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முதுமை தோற்றம், சரும சுருக்கம் வராமல் தடுப்பதோடு, பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யும். பெரும்பாலும் பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரியை வைத்து தான் ஃபேஸ் பேக் போட்டிருப்போம். ஆனால் வேறு சில பெர்ரிப் பழங்களைக் கொண்டும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
இப்போது பெர்ரிப்பழங்களைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போம்.
1.ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை விட்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

2. சமமான அளவில் ஆலிவ் ஆயில் மற்றும் கிரேப் சீட் ஆயிலை எடுத்துக் கொண்டு, சிறிது அதில் ஓட்ஸை சேர்த்து, அரைத்த ராஸ்ப்பெர்ரியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சுருக்கங்கள் மறையும்.

3. ப்ளூபெர்ரியை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகச் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

4. வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு மல்பெரி ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதற்கு மல்பெர்ரியை பால் சேர்த்து அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

5. 5-6 செர்ரியை எடுத்து அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் தோன்றும் முதுமைத் தோற்றத்தில் இருந்துவிடுபடலாம்.

6. சருமத்திற்கு ஒரு இயற்கையான கிளின்சர் வேண்டுமெனில், ப்ளாக்பெர்ரி ஃபேஸ் பேக்கை ட்ரை செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ப்ளாக்பெர்ரியை அரைத்து, அதில் சிறிது புளித்த தயிர் சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டல், முகம் பளிச்சென்று காணப்படும்.

7. அகாய் பெர்ரி பொடியை, மசித்த வாழைப்பழம், தயிர் மற்றும் ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் அழகாக காணப்படும்.

8. நெல்லிக்காய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு நெல்லிக்காய் பொடியில், பப்பாளியை மசித்து சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு, வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply