முதல் ஜெல்லி பீன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இசட்டிஇ

Loading...

முதல் ஜெல்லி பீன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இசட்டிஇஇசட்டிஇ நிறுவனம் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

எச்டிசி போன்ற பல நிறுவனங்கள் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்கின்றன. ஆனால் இசட்டிஇ நிறுவனம் ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்ட என்-880-இ என்ற ஸ்மார்ட்போனையே அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு செயல்படும் சிங்கிள் கோர் கியூவல்காம் பிராசஸரையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் 130 கிராம் இலகு எடை கொண்டதால், இதன் கவர்ச்சிகரமான தோற்றம் இன்னும் கூடுதல் அழகுடன் பிரதிபலிக்கும்.

அழகான தோற்றம் மட்டுமல்லாமல் இதில் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியின் மூலம் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்த முடியும்.

3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் புகைப்படமோ, வீடியோவோ எதுவானாலும் துல்லியத்துடன் பெறலாம். மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 4 ஜிபி மெமரி வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போன் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருப்பதால் இன்னும் நிறைய புதிய தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும்.

ஜெல்லி பீன் இயங்குதளத்தின் மூலம் இந்த என்-880-இ ஸ்மார்ட்போன் என்னென்ன வசதிகளை வழங்கும் என்ற செய்தி கூடிய விரைவில் வெளியாகும். இன்னும் இதன் விலை விவரம் ஏதும் வெளியாகவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply