முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படி

Loading...

முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படிபழங்காலம் முதலாக ரோஸ் வாட்டர் அழகு பராமரிப்பு பொருளாகப் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது டோனராக இருக்கட்டும் அல்லது ஃபேஸ் பேக்கில் ஆகட்டும், அனைத்திலும் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது சரும நிறத்தை அதிகரிக்க கடைகளில் என்ன தான் பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுவதால், ஏராளமானோர் இயற்கை வழிகளை நாட ஆரம்பித்துவிட்டனர்.
இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தின் நிறத்தை எப்படி அதிகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.


முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து, சருமம் பொலிவோடும் வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.


கடலை மாவு

கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.


தக்காளி சாறு

கோடையில் சருமத்தின் நிறம் எளிதில் கருமையடையும். இதனைத் தடுக்க, வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தக்காளி சாற்றில் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும், நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் கோடையில் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம்.


உருளைக்கிழங்கு

வாரத்திற்கு ஒருமுறை உருளைக்கிழங்கை அரைத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மற்றும் கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும நிறம் அதிகரிக்கும்.


சோம்பு

முகப்பரு மற்றும் அதன் தழும்புகளுடன் வெளியே செல்வது என்பது கஷ்டமான ஒன்றாக இருக்கும். ஆனால் ரோஸ் வாட்டர் முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதிலும் ரோஸ் வாட்டரில் ஊற வைத்து சோம்பை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, நல்ல பலனைக் காணலாம்.


தயிர்

இரவில் படுக்கும் முன் ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொண்டு, பின் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து, தயிர் மற்றும் வடிகட்டி வைத்துள்ள நீருடன் கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி உலர வைத்து கழுவ, சருமம் மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும்.


சந்தனப் பொடி

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மறைவதோடு, வெள்ளையான சருமத்தையும் பெறலாம்.


முட்டை மற்றும் தேன்

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, சருமத்தில் உள்ள முதுமை கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.


மாங்காய்

மாங்காயை அரைத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை அழகாக வெளிக்காட்டும்.


ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் காலையிலும், இரவிலும் முகத்தை துடைத்து எடுப்பதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply