மினி சோள முறுக்கு

Loading...

மினி சோள முறுக்கு
தேவையான பொருட்கள் :

மஞ்சள் சோள மா –- 1 கப்
வறுத்த வேர்க்கடலை மா –½ கப்
பொட்டுக்கடலை மா – ½ கப்
அரிசி மா – ½ கப்
வெள்ளை எள் –- ½ கரண்டி
நெய் – 2 கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிது
சீரகம் –சிறிது (விருப்பப்பட்டால்)
உப்பு, எண்ணெய் -– தேவைக்கு


செய்முறை

எண்ணெய், நெய் தவிர மற்ற எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலக்கவும் (சோள மாவை மட்டும் லேசாக வறுத்து சேர்க்கவும்).

பின் இந்த கலவையில் நெய்யை சூடாக்கி சேர்த்து, எள், சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.

மாவை கொஞ்சம், கொஞ்சமாக முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்து உடையாமல் டப்பாவில் அடுக்கி வைத்துக்கொள்ளவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply