மரவள்ளிக்கிழங்கு வடை

Loading...

மரவள்ளிக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு – அரைக் கிலோ
தனி மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப‌
பூண்டு – 5
சோம்பு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
எண்ணெய் – பொரிக்க‌ தேவையான‌ அளவு


செய்முறை :

கிழங்கை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

கிழங்குடன் தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு (தோலுடன் நசுக்கி போடவும்), சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்க‌ வேண்டாம்.

பிசைந்த‌ மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து கையில் வைத்து வடையாக‌ தட்டவும்.

வடையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இந்த‌ வடை சுற்றிலும் மொறுமொறுப்பாகவும் நடுவில் மிருதுவாகவும் இருக்கும் இந்த‌ வடைக்கு கறிவேப்பிலை, பூண்டு, சோம்பு தான் தனி சுவையை தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply