மணப்பெண்ணாக போகும் அனைவரும் அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

Loading...

மணப்பெண்ணாக போகும் அனைவரும் அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்அழகான தோற்றத்தைப் பெறவும் சருமத்தை பளபளவென வைத்திடவும் பல விதமான ஃபேஸ் பேக்குகள் வந்து விட்டன. சந்தையிலும் வகை வகையாக ஏராளமான பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் அதில் பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் ரசாயன பொருட்கள் பல கலக்கப்பட்டுள்ளது. அதனால் இயற்கையான ஃபேஸ் பேக்குகளையும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் பேக்குகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தாலும், அவை குறிப்பாக சில நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் திருமணம். பிறகு என்ன அலங்காரம் இல்லாத மணப்பெண் இருக்க முடியுமா என்ன?
மணப்பெண்ணாக போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலையத்திற்கு செல்வது கஷ்டமான ஒன்று. ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்களும் வீட்டிலேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்களின் அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் சந்தனம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பல்வேறு வழியில் பயன்படுத்தப்படும் சந்தனம் எண்ணெய் சுரப்பதை, சரும வறட்சியை, பருக்கள் தோன்றுவதை, கருவளையங்கள் உருவாவதை கட்டுப்படுத்த உதவும். இதை விட வேறு என்ன வேண்டும்? மணப்பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒன்றாக பளபளப்பான மின்னிடும் தோற்றத்தையும் கூட இது அளிக்கிறது. சரி, நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில சந்தன ஃபேஸ் பேக்குகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

வறட்சிக்கு குட்பை கூறுங்கள்

உங்கள் சருமம் வறண்டு இருந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான pH அளவை சமநிலையுடன் வைத்திருக்க உதவும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள். 3 டீஸ்பூன் சந்தன எண்ணெய், 3 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை கொண்டு மற்றும் வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது பூசி கொண்டு, அதை அப்படியே 15-20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரை கொண்டு முகத்தை கழுவி கொள்ளுங்கள். சந்தன எண்ணெயும் பாலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். பன்னீர் ஒரு டோனராக செயல்படும். இந்த சிகிச்சையை தினமும் பின்பற்றினால், நீர்ச்சத்துடன் கூடிய மின்னும் சருமத்தை பெறுவீர்கள்.

கருவளையங்கள் மாயமாகி போகட்டும்

கூடிய சீக்கிரத்தில் மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு, திருமணம் நாள் நெருங்க நெருங்க கருவளையங்களை எண்ணி தூக்கமே போய் விடும். சந்தனம் மற்றும் பன்னீரை கொண்டு செய்யப்படும் பேஸ்ட்டை கொண்டு இதனை வீட்டிலேயே குணப்படுத்தலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு, இதனை கண்களின் கீழ் தடவிக் கொள்ளுங்கள். காலையில் கழுவி விடுங்கள்.

எண்ணெய் கட்டுப்பாடு

வறண்ட சருமத்திற்கு மட்டும் சந்தனம் தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணெய் சருமத்திற்கும் அது தீர்வை அளிக்கும். அதனால் உங்கள் சருமத்தில் இருந்து அதிகமாக சுரக்கும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், உங்களுக்கு சந்தன ஃபேஸ் பேக் உள்ளது. ஒரு டீஸ்பூன் சந்தன பொடியை ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது; அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி கொண்டு, 20-30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இந்த பேக்கை வாரம் மூன்று முறை பயன்படுத்தினால் வழுவழுப்பான, நற்பதமான மற்றும் எண்ணெய் பிசுக்கு இல்லாத சருமத்தை பெறலாம்.

பருக்கள் பிரச்சனை இனியில்லை

பருக்களை குணப்படுத்த இந்து மிகச்சிறந்த தீர்வாகும். உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு டீஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் போடி மற்றும் மூன்று டீஸ்பூன் பன்னீர். இதனை ஒன்றாக சேர்த்து கலந்து வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து, அதனை முகத்தில் தடவிக் கொள்ளவும். தடவிய 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடுங்கள். உங்கள் முகத்தில் ஏற்கனவே இருக்கும் பருக்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் வரும் பருக்களை தடுக்கவும் செய்யும் இந்த பேக். பருக்கள் இல்லாத அழகிய சருமத்தை பெற இந்த பேஸ்ட்டை தினமும் தடவுங்கள்.

வெயிலால் கருப்பாவதை தடுக்கும்

பாதி எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலினால் சருமத்தின் நிறம் கருப்பாவதற்கு தீர்வு கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை மென்மையாகவும் ஆக்கும். சரும எரிச்சல் அல்லது அழற்சி உள்ள மணப்பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்பட மாட்டாது. அதற்கு காரணம் இந்த பேஸ்ட்டில் உள்ள எலுமிச்சை சாறு, உங்கள் பிரச்சனையை அதிகரிக்கவே செய்யும்.

வெண்மையாக தோன்ற…

தங்களின் சரும வகை எப்படிப்பட்ட வகையாக இருந்தாலும் சரி, வெண்மையான சருமத்தை பெற ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். வறண்ட சருமம் இருந்தால் சந்தன எண்ணெய்யை பயன்படுத்துங்கள். எண்ணெய் சருமத்தை கொண்டிருந்தால் சந்தன பொடியை பயன்படுத்துங்கள். ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தன எண்ணெய்/பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் பன்னீரை கொண்டு வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். பளிச்சிடும் மற்றும் வெண்மையான சருமத்தை பெற இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

வயதாவதை தடுக்கும் பேக்

இந்த பேக்கை பயன்படுத்துவதால் திருமணம் முடியும் வரை மட்டும் தான் உங்கள் அழகு நீடிக்கும் என்றில்லை. அதையும் தாண்டி உங்கள் அழகு நீடிக்கும். அதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளின் உருவாக்கத்தை தடுக்கும். அதனால் சீக்கிரத்தில் வயதாவதை இது தடுக்கும். சந்தன பொடி மற்றும் முல்தானி மட்டியை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை கலந்து கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்குங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறையாவது தடவினால் இளமையான சருமத்தை பெறலாம்.

Loading...
Rates : 0
VTST BN