மட்டன் முகலாய் மசாலா

Loading...

மட்டன் முகலாய் மசாலா

தேவையான பொருட்கள் :

​மட்டன் – அரை கிலோ
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
நெய் – 4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 250 – 400 கிராம்
பச்சை மிளகாய் – 3
காஷ்மீரி சில்லி – 4 – 5
பட்டை – ஒரு துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
மல்லி – 3 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தயிர் – ஒரு கப்
புதினா, கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவுசெ‌ய்யு‌‌ம் முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். மட்டனை நடுத்தர அளவுத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.

மட்டனை 4 தேக்கரண்டி நெய் விட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, காஷ்மீரி சில்லி, மல்லி, சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரைத்த மசாலா சேர்த்து சுருள வதக்கவும்.

வதங்கியதும் சிவந்து இருக்கும். பிறகு தயிரைக் கரைத்துச் சேர்த்து, மட்டனை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டவும்.

நன்கு பிரட்டிவிட்டு மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்துக் கிளறவும்.

அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருக்கவும். மட்டன் நன்றாக வெந்துவிடும். தண்ணீர் இருந்தால் ஓரளவு வற்றும் வரை வைத்திருந்து இறக்கவும்.

பரோட்டா, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையான மட்டன் முகலாய் மசாலா ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply