மசால் தோசை

Loading...

மசால் தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மா – 2 கப்

பெரிய உருளைக்கிழங்கு – 1

பிஞ்சான பரங்கிக்காய் சிறியதாக நறுக்கியது – 1/2 கப்

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்குசெய்முறை :

உப்பு சேர்த்து வேக வைத்து தோலை உரித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு அரிந்த பச்சை மிளகாயை வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக விடவும்.

அரை வேக்காடு வெந்ததும், வெந்த உருளைக்கிழங்கை மசித்துச் சேர்க்கவும். எல்லாமாக சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கி மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும்.

தவாவில் தோசை மாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும், மசாலாவை உள்ளே தேவையான அளவு வைத்து மூடி (தோசையைத் திருப்பிப் போடாமல்) எடுக்கவும்.

இதே போல் எல்லா மசாலா தோசைகளையும் ஊற்றி எடுக்கவும்.குறிப்பு:
பெரிய வெங்காயத்திற்குப் பதில் பரங்கிக்காய் துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply