பொம்மை வடிவில் களமிறங்கும் ஸ்பீக்கர்…

Loading...

பொம்மை வடிவில் களமிறங்கும் ஸ்பீக்கர்சமீபத்தில் உலகச் சந்தையில் பூம்பாட்டிக்ஸ் பூம்பாட்2 என்று ஒரு புதுமையான ஸ்பீக்கர் களம் இறங்கி இருக்கிறது. பொம்மை வடிவத்தில் இருக்கும் இந்த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக இருக்கிறது. இந்த ஸ்பீக்கரின் பின்புறம் கொக்கி உள்ளதால் இதை சட்டைப் பாக்கெட் மற்றும் பெல்டில் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கர் கைக்கு அடக்கமாகவும் இருக்கிறது. அதனால் இதை எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இந்த ஸ்பீக்கர் ஒரு வயர்லஸ் சாதனம் ஆகும். இது ப்ளூடூத் வசதியுடன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு சாதனங்களில் பொருத்தி சூப்பராக பாடல்களைக் கேட்டு மகிழலாம். மேலும் ப்ளூடூத் வசதி கொண்ட லேப்டாப் மற்றும் எம்பி3 ப்ளேயர்களிலும் இந்த ஸ்பீக்கரைப் பொருத்திக் கொள்ளலாம்.

மிகவும் சிறிய சைசில் வரும் இந்த ஸ்பீக்கர் தரமான இசையை வழங்குகிறது. அதோடு இதன் எடையும் மிகக் குறைவே. இந்த ஸ்பீக்கரில் வலது பக்க மேல் மூலையில் ஒரு எல்இடி விளக்கு உள்ளது. ப்ளூடுத் இயக்கத்தில் உள்ளதா மற்றும் பேட்டரி முழுவதுமாக உள்ளதா அல்லது சார்ஜ் குறைவாக உள்ளதா போன்ற விஷயங்களை இந்த விளக்கு உணர்த்தும்.

மேலும் இந்த ஸ்பீக்கரில் ஒரு அக்சீலியர் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவையும் உள்ளன. இதன் மூலம் இந்த ஸ்பீக்கரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply