பொடு­குத்­தொல்லை வயிறு உபா­தை­களா தீர்வு தரும் வெங்­காயம்

Loading...

பொடு­குத்­தொல்லை, வயிறு உபா­தை­களா தீர்வு தரும் வெங்­காயம்இயற்கை நமக்கு அளித்­துள்ள வெங்­கா­யத்தில் புர­தச்­சத்­துக்கள், தாது உப்­புக்கள், விற்ற­மின்கள் அடங்­கி­யுள்­ளன.

வெங்­கா­யத்தின் காரத்­தன்­மைக்கு முக்­கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்­பைல்-­டை-­சல்ட்­பைட் (alail Propyl-di-sulphide) என்ற எண்ணெய் தான்.

இந்த எண்ணெய், வெங்­கா­யத்தை உரிக்­கும்­போது, திர­வத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்­களில் பட்டு கண்ணீரை வர வைக்­கி­றது.


மருத்­துவ பயன்கள்

வெங்­கா­யத்தில் கல்­சியம், மக்­னீ­சியம், சோடியம், பொட்­டா­சியம், செலி­னியம், பொஸ்­பரஸ் போன்ற சத்­துக்கள் உள்­ளன.

பசி­யு­ணர்வு இல்­லா­த­வர்கள் வெங்­கா­யத்தை உண்­பதால் பசி உணர்வு தூண்­டப்­ப­டு­கி­றது.

வெங்­காயச் சாற்­றையும், வெந்­நீ­ரையும் கலந்து வாய் கொப்­ப­ளித்து, வெறும் வெங்­காயச் சாற்றைப் பஞ்சில் நனைத்து பல் ஈறு­களில் தடவி வர பல்­வலி, ஈறு­வலி குறை யும். அதிலும் 2–-3 நிமி­டங்கள் வெங்­கா­யத்தை வாயில் போட்டு மெல்­லு­வதால், வாய்க் கிரு­மி­களை அழிக்க முடியும்.

இரத்த சிவப்­ப­ணுக்­களை சுத்­தி­க­ரித்து (Red Blood Cells), இரத்த அழுத்­தத்தை (Blood Pressure) போக்­கு­கி­றது, குறிப்­பாக இதய நோய் உள்­ள­வர்கள் இதனை கண்­டிப்­பாக சாப்­பிட வேண்டும்.

கடு­மை­யான இரு­மலால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், வெங்­கா­யச்­சாறு மற்றும் தேன் கல­வையை சம அளவில் எடுத்­துக்­கொண்டால் தொண்டை புண், இருமல் குண­ம­டையும்.

புற்­றுநோய் செல்­களை வள­ர­வி­டாமல் தடுக்கும் சக்தி வெங்­கா­யத்­திற்கு உண்டு, எனவே வெங்­கா­யத்தை அதி­க­மாக சாப்­பி­டுங்கள்.

வெங்­கா­யத்தில் பாக்­டீ­ரி­யாக்­களை எதிர்த்துப் போராடும், ஆன்­டி ­பக்­டீ­ரியம் இருப்­பதால், வயிறு சம்­பந்­தப்­பட்ட நோய்­க­ளுக்கு தீர்­வ­ளிக்கும்.


வெங்­காய சாம்பார்

துவரம் பருப்பை நன்­றாகக் கழுவி, அத்­துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்­சள் தூள் சேர்த்து, குக்­கரில் வேக வைக்­கவும்.

புளியை ஊற­வைத்து, கரைத்து, வடி­கட்டிக் கொள்­ளவும். 2 கப் அள­விற்கு புளித்­தண்ணீர் இருக்­க­வேண்டும்.

வெங்­கா­யத்தை தோலு­ரித்து, முழு­தாக வைத்துக் கொள்­ளவும். தக்­கா­ளியை நடுத்­தர அளவு துண்­டு­க­ளாக வெட்டிக் கொள்­ளவும். பச்சை மிள­காயை நீள­வாக்கில், இரண்­டாக நறுக்கி வைக்­கவும்.

வாண­லியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்­தம்­ப­ருப்பு போட்டு வெடித்­ததும் வெங்­காயம், மிளகு சோம்பு பொடி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு, கரு­வேப்­பிலை சேர்த்து நன்­றாக வதக்­கவும்.

வெங்­காய‌ம் ச‌ற்று வ‌த‌ங்­கி­ய‌­வுட‌ன், த‌க்­கா­ளித்­துண்­டு­க‌ளைச் சேர்த்து ஒரு நிமிடம் வ‌த‌க்­க‌வும்.

பின்ன‌ர் அதில், புளித்­த‌ண்ணீர், சாம்பார் பொடி, மஞ்­சள்தூள், உப்­புச்­சேர்த்து, மூடி வைத்து, மித‌­மான‌ சூட்­டில் ­கொ­திக்க‌ விட‌வும்.

சுவையான வெங்­காய சாம்பார் ரெடி.


பயன்கள்

*நரம்­புத்­த­ளர்ச்சி குண­மாகும்.

*குறை­வான கொழுப்­புச்­சத்து உள்­ளதால் உடல் எடையை குறைக்க உதவும்.

*செரி­மா­னத்­திற்கு உத­வு­கி­றது.

*சிறு வெங்­கா­யத்தில் இன்­சுலின் உள்­ளதால், சர்க்­கரை நோயா­ளிகள் சாம்பார் வைத்து சாப்­பி­டலாம்.


அழகு தரும் வெங்­காயம்

வெங்­காயச் சாற்­றுடன் தேன் அல்­லது ஒலிவ் எண்ணெய் கலந்து, முகப்­பரு இருக்கும் இடத்தில் தட­வினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலி­வாக காணப்படும்.

வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது.

அதிலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை குறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply