பெண்களை மட்டுமே பாதிக்கும் விசித்திர ஃபைப்ரோமயால்ஜியா

Loading...

பெண்களை மட்டுமே பாதிக்கும் விசித்திர ஃபைப்ரோமயால்ஜியாவாழ்க்கை வலி நிறைந்தது’ என்பது பிறந்தது முதல் பெண்களுக்குப் போதிக்கப் பட்டுப் பழக்கப்படுத்தப்படுகிறது.

அதை உண்மையாக்கும் வகையில், பூப்பெய்துவது தொடங்கி, மெனோபாஸ் வரை அவர்களது உடல் சந்திக்கிற ஒவ்வொரு மாற்றமும் பலவித வலிகளும் வேதனைகளும் சொல்ல முடியாதவையாகவே இருக்கின்றன.

இந்த வலிகள் போதாதென்று, காரண மற்ற ஏதோ ஒரு வலியால் அவதிப் படுகிற பெண் களும் ஏராளம். வலி நிவாரண மாத்திரை, மருந்துகள், வெளிப்பூச்சுக் களிம்புகள், கை வைத்தியம் என எதற்கும் கட்டுப்படாமல் எக்ஸ்ரே, ஸ்கேன் என எதிலும் காரணம் அகப்படா மல் தொடர்கிற வலிகள் அவை.

வலியை உணர்கிறவர்களுக்கு மட்டுமே தெரிகிற அந்த வேதனை, குடும்பத்தாருக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் பொய்யாகவோ, நடிப்பாகவோ, மன நோயாகவோ தெரியும். இப்படியொரு வலி உண்மைதானா? வலி யைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு தீர்வே இல்லையா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிவாரண நிபுணர் குமார்.

‘‘பெண்களைக் குறிவைக்கிற இந்த விசித் திரமான வலிக்கு ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்று பெயர். 25 முதல் 60 வயதுப் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

பத்து பேரை பாதித்தால், அதில் 9 பேர் பெண்களாகவும், ஒருவர் மட்டுமே ஆணாகவும் இருப்பார்கள். உலகளவில் 2 முதல் 4 சதவிகிதப் பெண் களுக்கு இந்த வலி இருக்கிறது.

பெண்களில் பலருக்கும் பரவலாக உடலில் வலி, கை, கால்களில் குத்தல், குடைச் சல், உடல் சோர்வு, மனத்தளர்ச்சி என ஏதோ ஒன்று இருக்கும்.

சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் இதற்குப் பலன் தராது. இது போன்று பலர், பலவித வலிகளால் வருடக் கணக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு உடலள வில், வெளிப்புறத் தோற்றத்தில் நோய்க்கான எந்த அறிகுறிகளும் தெரியாது. ஆனால், வலி மட்டும் விடாமல் படுத்தும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இது ஒரு மனநோயாகவே பார்க்கப்பட்டிருக் கிறது. மிகச் சமீபத்தில் தான், வலி நிவா ரணப் பிரிவில் இப்படியொரு நோய் இருப்பதும், அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்துதான் ‘ஃபைப் ரோமயால்ஜியா’ என்பது தசை சம்பந்தப்பட்ட வலிகளை ஏற்படுத்தக் கூடியது என்பதும், இன்றைய தேதியில் மக்களாலும் மருத்துவர்களாலும் சரியாக கவனிக்கப் படாத, சிகிச்சையளிக்கப்படாத, சிகிச்சை எடுக்கப்படாத ஒரு நோயாக இருப்பதும் கூட தெரிய வந்திருக்கிறது.

இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் மாதிரியான எந்தச் சோதனையின் மூலமும் இதைக் கண்டுபிடிக்கவோ, உறுதி செய்யவோ முடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற அறிகுறிகளை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும். வலியின் ஆரம்பத்தில் பலரும் தாமாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பார்கள். அதற்குக் கட்டுப் படாத போது, மருத்துவரைப் பார்ப்பார்கள்.

மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகள் பலன் தராத போது, வேறு வேறு மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

வலி ஒரு பக்கமும், வலி குறையாதமன அழுத்தம் இன் னொரு பக்கமுமாக இரட்டை அவதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உடல் முழுவதுமான வலி, நாள்பட்ட வலி, சோர்வு, மனத்தளர்ச்சி, தூக்கமின்மை, கழுத்து, இடுப்பு, முதுகுப் பகுதிகளில் வலி, சில நேரங்களில் மூட்டு வலி, அடிக்கடி ஏற்படுகிற தலைவலி, வயிற்றுவலி, வயிற்று உபாதைகள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வாய் உலர்ந்து போவது, கவனக்
குறைவு, காலை வேளைகளில் உடல் விரைப்பு, கை, கால்களில் எரிச்சல், மறதி… இப்படி ஏதேனும் ஒன்றோ, எல்லாம் சேர்ந் தோ காணப்படும்.

மேற்சொன்ன அறிகுறி களில் பலதும் ரத்தசோகை, தைரொய்ட், நீரிழிவு, மூட்டு நோய்களின் அறிகுறிகளா கவும் தெரிவதால், முதலில் ரத்தப் பரிசோதனை செய்து, இவற்றில் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறதா என்பதை
யும் அதன் விளைவாகத்தான் வலிக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியி ருக்கும்.

உடலில் தசையும் எலும்பும் சந்திக்கிற 18 இடங்களில் 11 இடங்களில் வலி இருக்கும். அந்த இடத்து வலிக்கான காரணத் தைக் கண்டறியும் எல்லா பரிசோதனை முடிவுகளும் நார்மல் என்றே வரும். வலி நிவாரண மருத்துவரை அணுகினால், காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார்.

ஃபைப்ரோமயால்ஜியா என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிறப்பு மருந்து கள், பயிற்சிகள், மன அழுத்தம் குறைக்கிற உத்திகள் போன்றவை பரிந்துரைக்கப்படும். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை குறிப்
பிட்ட காலத்துக்குத் தவ றாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நடைப் பயிற்சி, நீச்சல் போன்ற உடற் பயிற்சிகள், வலியை சமாளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply