புதிய மைல் கல்லை எட்டியது அப்பிள் மியூசிக்

Loading...

புதிய மைல் கல்லை எட்டியது அப்பிள் மியூசிக்ஒன்லைனில் பாடல்களை கேட்டு மகிழும் வசதியினை அப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு அளித்து வருவது தெரிந்ததே.

மிகவும் பிரபல்யமான இச் சேவையானது குறுகியகாலத்தில் இமாலய வளர்ச்சியினை எட்டியுள்ளது.

இந்த தகவலை அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.

இதன்படி 13 மில்லியன் சந்தாகாரர்களை (Subscribers) குறித்த சேவை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்யுள்ளார்.

எனினும்இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் 11 மில்லியன் சந்தாகாரர்கள் இருந்துள்ளனர்.

இதேவேளை இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்துபவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.

அப்பிள் நிறுவனம் தனி பயனர் ஒருவருக்கு மாதாந்தம் 9.99 டொலர்களையும், ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மாதாந்தம் 14.99 டொலர்களையும் அறவிடுகின்றது.

இச் சேவையானது அப்பிள் நிறுவனத்தினால் கடந்த வருடம் ஜுன் மாதமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இது இவ்வாறிருக்கையில் Spotify மியூசிக் சேவையானது 30 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply