புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் நிஞ்சா 250சிசி

Loading...

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் நிஞ்சா 250சிசி2013 நிஞ்சா 250ஆர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை கவாஸாகி நிறுவனம் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் 650சிசி நிஞ்சா பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இதைத்தொடர்ந்து, 250சிசி நிஞ்சா பைக்கும் வடிவமைப்பில் பல மாற்றங்களுடன் வர இருக்கிறது.

புதிய 250சிசி நிஞ்சா ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை கவாஸாகி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

புதிய நிஞ்சா 250ஆர் பைக் கவாஸாகியின் இசட்எக்ஸ்-10ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் சாயலுடன் பல்வேறு மாற்றங்களை கண்டிருப்பதால், இன்னும் அதிக ஸ்போர்ட்டியான பைக்காக மாறியிருக்கிறது.

ஹெட்லைட் முதல் டெயில் லைட் வரையிலும், டேங்க்கிலும் பலமாகவே கைவைத்து மாற்றியிருக்கிறது கவாஸாகி. மேலும், எஞ்சினுக்கு காற்றை வாங்கிக் கொடுக்கும் ஏர்வென்ட்டுகளும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த 130மிமீ அகலம் கொண்ட டயருக்கு பதிலாக தற்போது 140 மிமீ டயர் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டமும் விருப்ப தேர்வாக பெற்றுக் கொள்ளலாம். லைம் கிரின், லைம் கிரீன்/எபனாய், எபனாய் மெட்டாலிக் மூன் டஸ்ட் பேஷன் ரெட், பேஷன் ரெட் ஸ்டார்ட் டஸ்ட், பியர்ல் ஸ்டார்ட்டஸ்ட் ஒயிட் ஆகிய கலர்களில் கிடைக்கும்.

2013 நிஞ்சா 250ஆர் பைக் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வது குறித்து முடிவெடுப்பது தற்போது பஜாஜ் ஆட்டோ கையில்தான் இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply