புதிய தொழில்நுட்பங்களுடன் கார்பன் ஸ்மார்ட்போன்

Loading...

புதிய தொழில்நுட்பங்களுடன் கார்பன் ஸ்மார்ட்போன்சிறப்பாக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தைகளில் செயல்பட்டு வருகிறது கார்பன் நிறுவனம். ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உருகும் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டிருக்கும். இதில் 4.3 இஞ்ச் அகன்ற திரையையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதியினையும் பயன்படுத்தலாம்.

இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமாரவினையும் எளிதாக பயன்படுத்த முடியும். இதனால் சிறந்த புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் மற்றும் வீடியோ சாட்டிங் போன்ற வசதிகளை சிறப்பாக பெறலாம்.

இந்த கார்பன் ஏ-18 ஸ்மார்ட்போன், மைக்ரோமேக்ஸ் சூப்பர்ஃபோன் ஏ-90 ஸ்மார்ட்போனது தொழில் நுட்பத்தினை ஒத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், சிறப்பாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதிக்கும் துணைபுரிகிறது. வைபை நெட்வொர்க் வசதி இன்று அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களிலும் அவசியமாக இருக்கிறது.

இந்த வைபை நெட்வொர்க் வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெற முடியும். மெமரி வசதியினை சிறப்பாக வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். மிக முக்கியமாக இந்த ஸ்மார்ட்போனின் விலையை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த கார்பன் ஏ-18 ஸ்மார்ட்போன் ரூ. 12,990 விலையினை கொண்டதாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply