புதிய க்விக்மெமோ வசதியுடன் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்

Loading...

புதிய க்விக்மெமோ வசதியுடன் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்புதிய க்விக்மெமோ என்ற வசதியை தனது எல் வரிசை ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது எல்ஜி நிறுவனம். சமீபமாக எல்-5, எல்-3 மற்றும் எல்-7 என்று வரிசையாக எல் வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது எல்ஜி நிறுவனம்.

இந்த எல் வரிசை ஸ்மார்ட்போன்களில் க்விக்மெமோ என்ற புதிய தொழில் நுட்ப வசதியினையும் வழங்குகிறது எல்ஜி நிறுவனம். அப்படி என்ன இந்த க்விக் மெமோ வசதியில் உள்ளது? என்று கேட்கும் நபர்களுக்கு பதிலும் இருக்கிறது.

இந்த க்விக்மெமோ வசதி ஸ்கிரீன்ஷாட் எடுக்க மிக எளிதாக பயன்படுகிறது. இந்த க்விக்மெமோ வசதியினை பயன்படுத்தி, ஸ்கரீன் ஷாட் எடுப்பது மட்டுமின்றி, அதன் மேல் விரல்களை பயன்படுத்தி வரையவோ அல்லது எழுதவோ முடியும். வாடிக்கையாளர்களின் கற்பனையில் உள்ளவற்றை இந்த வசதியின் மூலம், அழகாக வெளிப்படுத்தவும் முடியும்.

இந்த வசதி கிட்டத்தட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் எஸ்-பென் பயன்படுத்தி வரைவது போலத்தான். ஆனால் இந்த வசதியினை இப்போது க்விக்மெமோ மூலம் பெறலாம். இதில் விரலை கொண்டே வரையலாம்.

இந்த க்விக்மெமோ வசதியினை, ஆப்டிமஸ் எல் வரிசை ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது எல்ஜி நிறுவனம். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கொண்டது ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள்.

அதிலும் க்விக்மெமோ போன்ற புதிய வதிகளை வழங்கினால், வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக சவுகரியங்களை பெறலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply