புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீனுடன் கார்பன் டேப்லெட்

Loading...

புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீனுடன் கார்பன் டேப்லெட்இந்திய நிறுவனமான கார்போன் சூப்பரான மொபைல் மற்றும் டேப்லெட்டுகளைக் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்நிறுவனம் கார்போன் ஸ்மார்ட் பேட்1 என்ற ஒரு புதிய மலிவு விலை டேப்லெட்டை விரைவில் களமிறக்கியது. இந்த டேப்லெட் முதலில் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வந்தது.

தற்போது தனது ரசிகர்களை குஷிபடுத்த இந்த டேப்லெட்டில்ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தை கார்போன் அப்டேட் செய்து வருகிறது. கடந்த மாதம் இந்த டேப்லெட்டை வாங்கியவர்களும் இந்த அப்டேட்டை பெற முடியும். இந்தியாவிலேயே குறைந்த விலையில் வரும் ஜெல்லி பீன் டேப்லெட் என்று இந்த டேப்லெட்டை அழைக்கலாம்.

இந்த டேப்லெட்டின் இன்னொரு முக்கிய அம்சம் இது மிகவும் குறைந்த அளவே மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் இதன் செயல்திறன் அட்டகாசமாக இருக்கும்.

இந்த டேப்லெட் மிகவும் வேகமாக இயங்குகிறது. இதன் 2எம்பி முகப்பு கேமராவில் சூப்பராக வீடியோ உரையாடலை நடத்தலாம். இதன் மெமரியையும் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதில் இருக்கும் எச்டிஎம்ஐ தரமான வீடியோவை வழங்கும்.

இதன் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு 7 மணி நேர வெப் ப்ராவுசிங் மற்றும் 8 மணி நேர வீடியோ ப்ளே பேக் மற்றும் 24 மணி நேர மியூசிக் ப்ளேபேக் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த டேப்லெட் 3ஜி வசதியுடன் வருகிறது.

ஏற்கனவே இந்த டேப்லெட்டை வைத்திருப்போர் இலவசமாக ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்க்ரேட் செய்து கொள்ளலாம். கார்போன் செய்திருக்கும் இந்த ஜெல்லி பீன் அப்க்ரேட், ஸ்மார்ட் டேப்1 டேப்லெட்டின் விற்பனையை அதிகரிக்கும் என்று நம்பலாம். இந்த டேப்லெட்டின் விலை ரூ.6,999 ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply