புடவையில் ஜொலிக்க வேண்டுமா

Loading...

புடவையில் ஜொலிக்க வேண்டுமாபுடவை இளவண்ணமுடையதாக இருந்தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது. புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால், ரவிக்கை மெல்லிய வண்ணத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் புடவை, ரவிக்கை என்று பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
* ‘ஷாப்பிங்’ போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண ‘நைலான்’ புடவைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது அடர்வண்ணம் கொண்ட ‘காட்டன்’ புடவைகளை ஏற்றவை.
* உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புடவைகளை அணிய வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply