பீர்க்கங்காய் பஜ்ஜி

Loading...

பீர்க்கங்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் – 1
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு/சோள மாவு – 1/2 கப்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)


செய்முறை:

முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, பின் அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு/சோள மாவு, சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply