பீட்ரூட் சாலட்

Loading...

பீட்ரூட் சாலட்
தேவையானவை:

பீட்ரூட் துருவல் – ஒரு கப்
பச்சை வேர்க்கடலை – அரை கப்
துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – அரை கப்
எலுமிச்சை – பாதி
உப்பு – அரை தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லித் தழை – ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி


செய்முறை

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் துருவலுடன் தேங்காய் துருவல். பச்சை வேர்க்கடலை, கொத்தமல்லித் தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

அதனுடன் துருவிய இஞ்சி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். (எலுமிச்சை சாறை பரிமாறும் போதுகூட பிழிந்து கொள்ளலாம்)

பிறகு அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கலந்து கொள்ளவும்.

சுவையான, ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சாலட் ரெடி. சிறிது கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply