பிரெட் பிரியாணி

Loading...

பிரெட் பிரியாணி
தேவையானப் பொருட்கள் :

பிரெட் – 6 ஸ்லைஸ்,
பிரிஞ்சி இலை – 1,
பட்டை – சிறிய துண்டு,
லவங்கம் – 4,
ஏலக்காய் – 1,
பாஸ்மதி அரிசி – 1 ஆழாக்கு,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 1,
தக்காளி – 2,
இஞ்சி-பூண்டு விழுது – சிறிது,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், நெய் – தேவைக்கு.


செய்முறை :

குக்கரில் சிறிது எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, லவங்கம் போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தூள், தனியா தூள், புதினா சேர்க்கவும்.

பின்னர் பாஸ்மதி அரிசி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கி வைத்து பொரித்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply