பிரெட் சர்க்கரைப் பொங்கல்

Loading...

பிரெட் சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்

கருப்பட்டி – 100 கிராம்
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
பிரெட் – 6 துண்டுகள்
முந்திரி – 50 கிராம்
உலர்ந்த திராட்சை – 50 கிராம்
சிறு பருப்பு – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப


செய்முறை :

சிறு பருப்பை மசிய வேக வைத்துக் கொள்ளவும். (குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்).

பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பொரித்த பிரெட் துண்டுகளை சிறு பருப்பில் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைப் போட்டு பாகாக்கிக் கொள்ளவும்.

இதில் ஏலக்காய் தூளைச் சேர்க்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர்ந்த திராட்சையை பொரிக்கவும்.

இப்போது சிறு பருப்பை கருப்பட்டிப்பாகு இருக்கும் கடாயில் ஊற்றவும். அத்துடன் முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும்.

பிரெட் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply