பிரட் சாண்ட்விட்ச்

Loading...

பிரட் சாண்ட்விட்ச்
தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 6-8
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
முட்டை – 3
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
தக்காள் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.

பின்பு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும தக்காளி சாஸ் சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், பிரட்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்ய வேண்டும்.

பின் செய்து வைத்துள்ள மசாலாவை டோஸ்ட் செய்த ஒரு பிட்டின் மேல் வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான பிரட் சாண்ட்விட்ச் ரெடி!!!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply