பிரட் ஒனியன் பொடிமாஸ்

Loading...

பிரட் ஒனியன் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் – 8 துண்டுகள்

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

மிளகு – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்


செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• கோதுமை பிரட் துண்டுகளை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

• பின் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

• பின்பு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், பிரட் ஒனியன் பொடிமாஸ் ரெடி.

• குழந்தைகளுக்கு விருப்பமான உணவு இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply