பல புதிய தொழில்நுட்பங்களுடன் டிசி நிறுவனம் அறிமுகம் செய்யும் அம்பாசடர் பிஎம்டபிள்யூ மினி

Loading...

பல புதிய தொழில்நுட்பங்களுடன் டிசி நிறுவனம்கார்களை விரும்பும் விதத்தில் மாற்றித் தருவதில் கைதேர்ந்த டிசி தற்போது அம்பாசடரை பிஎம்டபிள்யூ மினி கார் போன்று மாற்றி அசத்தியுள்ளது.

பிரபல வாகன வடிவமைப்பு நிபுணர் திலீப் சாப்ரியாவின் டிசி கஸ்டமைசேஷன் நிறுவனம் டொயோட்டா பார்ச்சூனர், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட கார்கள் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை அதிக சொகுசு அம்சங்களுடன் மாற்றித் தருவதில் நாட்டின் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.

இந்த வரிசையில் தற்போது பழம்பெருமை வாய்ந்த அம்பாசடர் காரை தனது கைவண்ணத்தில் மனதை மயக்கும் விதத்தில் வடிவமைத்து அசத்தி காட்டியிருக்கிறது டிசி கஸ்டமைசேஷன் நிறுவனம். வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு காஸ்ட்லியான மினி கார்களை போன்று இருக்கிறது.

உட்புறத்தை பொறுத்தவரை இரண்டு வரிசை இருக்கைகளும் மிக மிக சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்வரிசையில் டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் என அனைத்தும் மரவேலைப்பாடுகளால் இழைக்கப்பட்டு கண்ணை கவர்கிறது. முன்வரிசை இருக்கையை தனியாக பிரித்து ஒரு அறை போன்று மாற்றியுள்ளனர்.

பின்வரிசை இருக்கையில் வீடியோ திரை, மியூசிக் சிஸ்டம், லேப்டாப் வைப்பதற்கு வசதியாக மடக்கி விரிக்கும் வசதிகொண்ட பலகை, ஆர்ம் ரெஸ்ட், தனி ஏசி வென்ட்டுகள் என ஏராளமான வசதிகள் இருக்கிறது. பின் இருக்கையில் 2 பேர் மிக மிக தாராளமாக அமர்ந்து செல்லலாம்.

சென்னையில் லலிதா ஜூவல்லரி நிறுவனத்துடன் இணைந்து ஷோரூம் அமைத்து கஸ்டமைசேஷன் மற்றும் சூப்பர் கார் விற்பனையை டிசி செய்து வருகிறது. சென்னை, எழும்பூர், பூந்தமல்லி சாலையில் டிசி-லலிதா கார் கஸ்டமைசேஷன் ஷோரூம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply