பல்ஸர் 200 என்எஸ் தற்போது நாடு முழுவது விற்பனையில்

Loading...

பல்ஸர் 200 என்எஸ் தற்போது நாடு முழுவது விற்பனையில்இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில், இரண்டாவது இடத்தில் இருப்பது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இதன், பல்ஸர் பைக் மிகவும் பிரபலமான ஒன்று. கடந்த ஜனவரி மாதம், பல்ஸர் 200 என்எஸ் என்ற புதிய பைக்கை, இந்த நிறுவனம் மஹாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தியது. பின்னர், டில்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த பைக் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய பைக்கில், புகை மாசுவை கட்டுப்படுத்தும், அதிக மைலேஜ் தரும், டிரிபிள் ஸ்பார்க் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதி கொண்டது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக்கின் விலை ரூ.85,000 ( எக்ஸ் ஷோரூம், டில்லி).

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply