பல்சரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களமிறக்கும் முடிவில் பஜாஜ்

Loading...

பல்சரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களமிறக்கும் முடிவில் பஜாஜ்குறிப்பிட்ட மாநகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய 200சிசி பல்சர் இனி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோவின் பல்சர் முன்னிலை வகிக்கிறது. மேலும், பல்சரின் மார்க்கெட் பங்களிப்பை தக்கவைக்கும் வித‌த்தில் அவ்வப்போது பல்சர் வரிசையில் புதிய மாடல்களை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு புதிய பல்சர் 200என்எஸ். கம்பீர தோற்றம், பவர்ஃபுல் எஞ்சினுடன் வந்திருக்கும் பல்சர் 200என்எஸ் இளைஞர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ பார்வைக்கு அறிமுகப்படுத்தியது.

ஆனால், முறைப்படி அறிமுகம் செய்வது குறித்து பஜாஜ் ஆட்டோ எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் புதிய பல்சரை புனேயில் சத்தமில்லாமல் விற்பனைக்கு கொண்டு வந்தது பஜாஜ் ஆட்டோ. அதனைத் தொடர்ந்து, டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பல்சர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மாநகரங்களில் மட்டுமே புதிய பல்சர் 200என்எஸ் விற்பனைக்கு வந்ததால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், புதிய பல்சர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தனது ஷோரூம்களில் கிடைக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தற்போது பெரும்பாலான டீலர்களுக்கு புதிய பல்சர் 200என்எஸ் பைக் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. எனவே, புதிய பல்சரை வாங்க துடிப்புடன் காத்திருந்த வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள பஜாஜ் ஆட்டோ ஷோரூமை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விபரங்களை கேட்டுக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply