பல்­லுக்கு கிளிப் அணிந்­த­வர்கள் கவ­னிக்க வேண்­டி­யவை

Loading...

பல்­லுக்கு கிளிப் அணிந்­த­வர்கள் கவ­னிக்க வேண்­டி­யவைகோண­லான பற்­களை நேர்­செய்­வது, தூக்­க­லான பற்­களை உட்­கொண்டு செல்­வது, பற்­களின் இடை­வெ­ளியைச் சரி­செய்­வது போன்ற பல் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு, ‘ஆர்­தோ­டான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்­படும்
‘டென்டல் க்ளிப்’ பொருத்­தப்­ப­டு­கி­றது.

கிளிப் போடும்­போது பல்­லுக்கும் கிளிப்­புக்கும் இடையே சிறிய இடை­வெளி ஏற்­படும்.

இதற்கு உள்ளே உண­வுத்­துண்­டுகள் புகுந்து பாக்­டீ­ரியா உள்­ளிட்ட கிரு­மிகள் வளர ஆரம்­பிக்கும்.

இந்தத் துண்­டு­களை அகற்­றா­த­போது, பல்லின் எனாமல் பாதிக்­கப்­ப­டலாம். ஈறு தொடர்­பான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம்.

மேலும், சொத்தை விழு­வ­தற்­கான வாய்ப்பும் அதி­க­ரிக்கும்.

பல் உள்ளே தள்­ளப்­ப­டு­வதால், பல் வேரில் பிரச்­சினை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்­து­வரின் அறி­வு­ரை­களைப் பின்­பற்­றாது போனால், பல் சீர­மைப்பு முயற்­சியும் தோல்­வி­ய­டை­யலாம்.


கிளிப் அணிந்­த­வர்­க­ளுக்­கான டிப்ஸ் :

* ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்­ற­வற்றை தாரா­ள­மாக சாப்­பி­டலாம்.

* ஒரு நாளைக்கு, குறைந்­தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

* ஒவ்­வொரு முறை உணவு உண்­டதும், பல் துலக்­கு­வது நல்­லது. முடி­யா­த­பட்­சத்தில், தண்­ணீ­ரைக்­கொண்டு வாய் கொப்­ப­ளிக்க வேண்டும்.

* பல் துலக்­கி­யதும் ‘கிளிப்’ சுத்­த­மாக இருக்­கி­றதா என்­பதை, கண்­ணா­டியில் பார்த்து உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

* பல்­லுக்கும் கிளிப்­புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்­லிய மெழுகு நூலைப் பயன்­ப­டுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.

* சுவிங்கம், வாயில் ஒட்­டிக்­கொள்­ளக்­கூ­டிய சொக்லெட், போன்ற உணவுப் பொருட்­களைத் தவிர்க்க வேண்டும்.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply