பன்னீர் ஃபிங்கர்ஸ்

Loading...

பன்னீர் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள்

பன்னீர் – ஒரு கப் (துருவியது)

பாலில் ஊறவைத்த ரவை – கால் கப்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன்

சோயா சாஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மைதா மாவு – ஒரு டீஸ்பூன்

சோள மாவு – இரண்டு டீஸ்பூன்



செய்முறை

ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் பல்லில் ஊறவைத்த ரவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, அதில் மிளகாய் தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின், அதில் கொஞ்சம் மாவு எடுத்து இரண்டு கையால் உருட்டி வீரல் கனத்திற்கு உருட்டி வீரல்நிலதிற்கு வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply