பனோசோனிக்கின் பளிச்சென்று படம் பிடிக்கும் கேமரா

Loading...

பனோசோனிக்கின் பளிச்சென்று படம் பிடிக்கும் கேமராசூப்பரான பல நவீன கேமராக்களைக் களமிறக்கியிருக்கும் பனோசோனிக் நிறுவனம் அடுத்ததாக ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கேமரா பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் வருகிறது.

இந்த புதிய கேமராவிற்கு லுமிக்ஸ் டிஎம்சி ஜி5 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவில் வீனஸ் என்ஜின் VII சென்சார் உள்ளதால் இது மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்கும். குறிப்பாக புகைப்படத் துறையில் இருப்போருக்கு இந்த கேமரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த லுமிக்ஸ் கேமரா 3 இன்ச் அளவில் ஒர டிஸ்ப்ளேயைக் கொண்டு வருகிறது. அதோடு இது 16எம்பி சென்சார் சொண்டிருப்பதால் இருட்டான இடங்களிலும் மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். அதுபோல் இந்த கேமரா முழு எச்டி வீடியோவையும் எடுக்கும் சக்தி வாய்ந்தது.

இந்த கேமரா இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த கேமராவில் வரும் சாதாரண மாடல் ரூ.47,000க்கு விற்கப்படுகிறது. இந்த கேமராவின் உயர்தர மாடல் ரூ.70,000க்கு விற்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply