பனீர் சீஸ் ரோல்ஸ் | Tamil Serial Today Org

பனீர் சீஸ் ரோல்ஸ்

பனீர் சீஸ் ரோல்ஸ்

தேவை­யான பொருட்கள் :

ப்ரட் – 6 துண்­டுகள்
எண்ணெய் – தேவைக்கேற்­ப.
பொடியாக நறுக்கிய வெங்­கா­யம் – 2
துருவிய பனீர் – 1 1/2 கப்
துருவிய சீஸ் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
உப்பு – 3/4 டீஸ்பூன்
தக்காளி சோஸ் -3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
பால் – 3 டீஸ்பூன்



செய்­முறை :

பொடியாக நறுக்கிய வெங்­கா­ய­த்தை தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

சேர்ப்­ப­தற்கு தேவையான மற்ற பொருட்களை வெங்­­கா­யத்­துடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பிரெட்டின் ஓரங்களை வெட்டி சப்பாத்திக்குத் தேய்ப்பது போல் நீளவாக்கில் தேய்க்கவும்.

2 டீஸ்பூன் வெங்­காய கல­வையை ஓர் ஓரத்தில் வைத்து ரோல் செய்து ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டிவிடவும்.

எல்லா பிரெட் துண்டுகளையும் இப்படி தயார் செய்து காய்ந்த தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்­து எடுக்கவும்.

தக்காளி சோஸுடன் சூடாகப் பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN