பதிர் பேனி

Loading...

பதிர் பேனி
தேவையான பொருட்கள் :

மைதா மாவு – ஒரு கப்
நெய் – 100 கிராம்
பொடித்த சர்க்கரை – சுவைக்கேற்ப
பாதாம் பால் – அரை லிட்டர்
உப்பு, சமையல் சோடா – தலா ஒரு சிட்டிகை
அரிசி மாவு – அரை கப்


செய்முறை :

​மைதா மாவுடன் உப்பு, சமையல் சோடா மற்றும் 50 கிராம் நெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

மீதிமுள்ள 50 கிராம் நெய்யை அரிசி மாவில் போட்டு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சப்பாத்திகளாக திரட்டி, அரிசி மாவு பேஸ்ட்டை அதன் மீது நன்றாகத் தடவிக் கொள்ளவும். இதே போல் 6 சப்பாத்திகளை அரிசி பேஸ்ட் தடவி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கவும்.

அடுக்கியவற்றை அப்படியே சுருட்டவும்.

பிறகு அதைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய துண்டுகளை லேசாக திரட்டவும்.

அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பதிர் பேனி தயார்.

பரிமாறும் போது பாதாம் பால் ஊற்றி, சுவைக்கேற்ப பொடித்த சர்க்கரையைப் போட்டு பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply