பட்ஜெட் விலையை குறி வைத்து புதிய டேப்லட்

Loading...

பட்ஜெட் விலையை குறி வைத்து புதிய டேப்லட்மின்னணு சாதனங்களை வழங்கும் சேம்பியன் கொம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் புதிய டேப்லட்டினை வழங்க உள்ளது. இந்நிறுவனம் டபிள்யூடேப் என்ற பெயர் கொண்ட டேப்லட்டினை வழங்க உள்ளது.

7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட்டில் 1.5 வேகத்தில் இயங்கும் ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனாக இருந்தாலும், டேப்லட்டாக இருந்தாலும் நிறைய வாடிக்கையாளர்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் எந்த புதிய டேப்லட்களை அறிமுகம் செய்தாலும், அது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதா? என்ற கேள்வி முன் நிற்கிறது. ஜெல்லி பீன் என்ற புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷன் வந்தாலும், ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.

சேம்பியன் கொம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த டபிள்யூடேப் டேப்லட் முகப்பு கேமராவினை வழங்கும். 4ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வசதி, 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை போன்ற பல வசதிகளையும் இந்த டபிள்யூடேப் சிறப்பாக வழங்கும். மின்னணு சாதன மார்கெட்டில் குறைந்த விலை கொண்ட டேப்லட்டிற்கு அதிக மதிப்பு இருப்பது அனைவருக்கும் தெரியும்.

குறைந்த விலை என்றாலும் உயர்ந்த தொழில் நுட்பத்தினை இந்த டபிள்யூடேப் டேப்லட் வழங்கும் என்று சேம்பியன் கொம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். சேம்பியன் கொம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய டபிள்யூடேப் டேப்லட் ரூ. 4,899 விலை கொண்டதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply