பட்ஜெட் விலையில் வீடியோகான் மொபைல்கள்

Loading...

பட்ஜெட் விலையில் வீடியோகான் மொபைல்கள்வி-1531+ என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்கிறது வீடியோகான் நிறுவனம். இந்த மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. புத்தம் புதிய மொபைலான இந்த மொபைலின் திரை 240 X 320 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும். இதில் கேமராவும் உண்டு. 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெறலாம். இதன் முக்கிய வசதி என்னவென்றால் இந்த வி-1531+ மொபைலில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்கள் ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளன. ஜிபிஆர்எஸ் மூலம் இன்டர்நெட் பிரவுசிங் வசதியினையும் பயன்படுத்த முடியும். இப்படி பல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த வீடியோகான் வி-1531+ மொபைலை ரூ. 1,850 விலையில் பெறலாம். இந்த விலை நிச்சயம் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு பொருத்தமானதாக இருக்கும்.

வீடியோகான் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மொபைல்களின் அணிவகுப்பு. இதன் தொழில் நுட்பம் மற்றும் விலை விவரம் பற்றிய சிறிய கண்ணோட்டம் இங்கே.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply