பட்ஜட் விலையில் சந்தைக்கு வரும் மினி ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

பட்ஜட் விலையில் சந்தைக்கு வரும் மினி ஸ்மார்ட் கைப்பேசிஸ்மார்ட் கைப்பேசிகளை பாவிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு இன்று அனைவரது கைகளிலும் தவழ்கின்றது.

இதனை சாதகமாகக் கொண்டு பல நிறுவனங்களும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.

எனினும் இவற்றில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களே மக்கள் மனம் வென்ற ஸமார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துவருகின்றன.

அவற்றுள் சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் ZTE நிறுவனமும் ஒன்றாகும்.

இந் நிறுவனம் விரைவில் Nubia Z11Mini எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது தற்போதைய பணப்பரிமாற்ற வீதத்தின்படி 230 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சிறப்பம்சங்களாக 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரை, QualcommSnapdragon 617 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.

இவை தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply