பச்சைப் பட்டாணி கேக்

Loading...

பச்சைப் பட்டாணி கேக்

தேவையான பொருட்கள்

ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 1 கப்
கடலை மா – 1 கப்
ரவை – 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.தாளிப்பதற்கு…

எள்ளு, சீரகம், பெருங்காயம் – தேவைக்கேற்ப
வெதுவெதுப்பான பால் – 1/2 கப்செய்முறை

பதப்படுத்திய பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

கடலை மா, உப்பு, ரவை, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கவும். இத்துடன் முதலில் அரைத்த பட்டாணி விழுதை சேர்க்கவும்.

ஈஸ்டை சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் ஊற வைத்து இது பொங்கியதும் இந்த கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயையும் சேர்த்து கலக்கவும்.

ஒரு குக்கர் தட்டில் எண்ணெய் தடவி (மீதி உள்ள எண்ணெய்) வெயிட் போடாமல் ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

வெந்து ஆறியதும் தாளித்து கொட்டி பின் துண்டுகள் போட்டு விருப்பமான சட்னி சோஸுடன் பரிமாறவும். காலை, மாலை நேர டிபனுக்கு இது உகந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply