நெய் பாயாசம்

Loading...

நெய் பாயாசம்
தேவையான பொருட்கள்

அரிசி – –1 கப்
வெல்லத்தூள் – 2 1/2 கப்
நெய் -– 4 தே.க
ஏலக்காய்த்தூள் – – 1 சிட்டிகை
பொ. ந. தேங்காய் – –1 பிடி.


செய்முறை:

பாத்திரத்தில் 1 தே.க நெய் விட்டு நறுக்கிய தேங்காயை சிவக்க வறுக்கவும்.

அரிசியை கழுவி பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கவும்.

வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

அதை வடிகட்டி பாகுபதம் வந்தவுடன் வெந்த சாதத்தை போட்டு குழைக்கவும்.

நன்றாக குழைந்ததும் 3 தே.க நெய் விட்டு மிதமான தீயில் நன்றாக கிளறவும்.

அதில் வதக்கிய தேங்காயையும், ஏலக்காய்த்தூளையும் சேர்த்து நன்றாக கிளறி, எல்லாம் சேர்ந்து பாயாச பதத்தில் வரும்போது இறக்கி வைக்கவும்.

சுவையான நெய் பாயாசம் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply