நீதிமன்ற தலையீட்டிற்கு உள்ளாகும் கூகுள் மற்றும் ஒராகிள்

Loading...

நீதிமன்ற தலையீட்டிற்கு உள்ளாகும் கூகுள் மற்றும் ஒராகிள்கூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் இயங்குதளத்தினை வடிவமைப்பதற்காக ஜாவா (Java) கணினி மொழியினை பயன்படுத்திவருகின்றது.

தனது அனுமதியின்றி கூகுள் ஜாவா மொழியினைப் பயன்படுத்துவதாக ஒராகிள் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இதில் நஷ்ட ஈடாக 9.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கூகுள் நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தருமாறு ஒராகிள் நிறுவனம் குறிப்பிட்டிருந்தமையையும் சில வாரங்களுக்கு முன்னர் செய்திகளினூடாக அறிந்திருப்பீர்கள்.

இவ் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இரு நிறுவனங்களையும் பேசி உடன்பாட்டிற்கு வருமாறு பணித்திருந்தது.

இதன்படி கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும், ஒராகிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சப்ரா ஹட்சும் கடந்த வெள்ளியன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.

எனினும் இப் பேச்சுவார்த்தையானது எந்தவிதமான சுமுகமான முடிவுகளும் எட்டப்படாது தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக நீதிமன்றம் தலையிட்டு இப் பிரச்சினைக்கான தீர்ப்பை வழங்கவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply