நாவினால் கவ­ரப்­படும் உண­வு­களின் பின்னால் ஒளிந்­துள்ள அபா­யங்கள்

Loading...

நாவினால் கவ­ரப்­படும் உண­வு­களின் பின்னால் ஒளிந்­துள்ள அபா­யங்கள்நாம் உள்­ளெ­டுக்கும் உணவு தொடர்பில் சுய­கட்­டுப்­பாட்­டினை வீட்டில் பேணி­னாலும், சமூக நோக்கில் அதனைக் கடைப்­பி­டிப்­ப­தென்­பது சற்றே கடி­ன­மா­ன­தா­கவே தென்­ப­டு­கின்­றது.

பிறந்த நாள் விருந்­துகள், திரு­மண வைப­வங்கள் போன்­ற­வற்­றிற்கு அழைக்­கப்­ப­டு­கையில், அங்கு பரி­மா­றப்­படும் உண­வுகள் மற்றும் பானங்கள் உடல்­ந­லத்­திற்கு உகந்­த­வை­யாகக் காணப்­ப­டு­வ­தில்லை.

அள­வுக்கு அதி­க­மாக கொழுப்பு மற்றும் நெய் சேர்க்­கப்­பட்­ட­வை­யாக அங்கு பரி­மா­றப்­படும் உண­வுகள் அமை­வ­தோடு, இனிப்பு மிகுந்த குளிர்­களி, பழச்­சா­றுகள் மற்றும் அதிக சீனி சேர்க்­கப்­பட்ட மென்­பா­னங்கள் என நோய்­க­ளுக்கு ஆளாக்கும் உண­வு­களே அதிகம் பரி­மா­றப்­ப­டு­கின்­றன.

தற்­போது, அநே­க­மான திரு­மண வைப­வங்­க­ளுக்­கான உண­வுகள் உண­வ­கங்­களால் பரி­மா­றப்­ப­டு­வதால், வருங்­கால வாடிக்­கை­யா­ளர்­களைக் கருதி, உண­வு­களைச் சுவை­யூட்­டு­வ­தற்கு ‘அஜி­னமோட்’ என்ற வேதி உப்பும் அளவு கணக்­கின்றி அந்த உண­வு­களில் சேர்க்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான வைப­வங்­க­ளுக்குச் செல்­லு­கையில், நாகரிகம் என்ற பெயரால் பரி­மா­றப்­ப­டு­ப­வை­களை அருந்­த­வேண்­டிய கட்­டாயம் ஏற்­ப­டு­கின்­றது.

தற்­போது நவீன உண­வ­கங்கள் நாட்டின் தலை­ந­க­ரங்­களில் மட்­டு­மல்­லாமல், மாவட்­டங்­களின் பிர­தான நக­ரங்­க­ளிலும் அந்த நவீன உண­வ­கங்கள் முளைத்­துள்­ளன. இங்கே, ‘பேகர்’ (Burger) போன்ற புதிய நவ­நா­க­ரிக உண­வு­க­ளுடன் காப­னீ­ரொட்­சைட்டு வாயு உள்­ள­டக்­கப்­பட்ட நுரை ததும்பும் மென்­பா­னங்கள், பொரித்த உரு­ளைக்­கி­ழங்கு எனப் பல பரி­மா­றப்­ப­டு­கின்­றன.

அவற்றின் விலை­களும் அதி­க­மாக இருந்­த­போ­திலும் தமது உழைப்­பினை அங்கு விரயம் செய்யும் இளந்­த­லை­மு­றை­க­ளையும் அதிகம் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. மேற்­கு­றிப்­பிட்ட ‘பேகர்’ என அழைக்­கப்­படும் உணவு குறித்தும், அதை ஒத்த ஏனைய உண­வுகள் குறித்தும் பல அக உண்­மை­களை அமெ­ரிக்க மின­சொற்றா பல்­க­லைக்­க­ழக ஆய்­வாளர் David Tilman விப­ரித்­துள்ளார்.

புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு பல­ரையும் மீண்டும் மீண்டும் கவர்ந்து கொண்­டி­ருக்கும் இந்த உண­வு­வ­கைகள் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு உகந்­தவை அல்ல என ஆய்­வாளர் கோட்­டிட்டுக் காட்­டு­கின்றார்.

இவ்­வு­ண­வு­களில் அதிக அள­வி­லான சீனி, அதிக பதனஞ் செய்­யப்­பட்ட செறி­வாக்­கப்­பட்ட கொழுப்பு மற்றும் விலங்குப் புரதம் ஆகி­யவை அதிகம் காணப்­படும் அதே­வேளை, நார்ப் பொருட்கள் மிகக் குறைந்த அளவில் காணப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில், அதிக கலோரிப் பெறு­மா­னத்­தினைக் கொண்­ட­தாக இந்த உண­வுகள் அமை­கின்­றன.

எனவே, உணவை உள்­ளெ­டுக்கும் நபர்கள் அதிக பருமன் கொண்­ட­வர்­க­ளாக மாறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இந்த உண­வு­களில் fructose மற்றும் palmitic ஆகிய வேதி­அ­மி­லங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளன.

இந்த அமி­லங்கள் மனி­தனின் நோய் எதிர்ப்புத் தொகு­தியை சீண்­டு­வ­தாக அமை­வ­தாக ஆய்­வாளர் சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

இச்­சீண்­டுகை கார­ண­மாக, உடலின் நோயெ­திர்ப்புத் தொகுதி குழப்­ப­முற்று, சமி­பாட்டுத் தொகு­தியில் சமி­பாட்­டிற்கு உதவும் E.coli பக்­டீ­ரியா நுண்­ணங்­கி­க­ளையும் அழித்­தொ­ழிக்­கின்­றன.

இக்­கு­றிப்­பிட்ட வேதி­அ­மி­லங்கள் ஏற்­ப­டுத்தும் குழப்­பங்கள் கார­ண­மாக உடலின் நோயெ­திர்ப்புத் தன்மை நலி­வ­டைந்து செல்லும் என ஆய்­வாளர் வலி­யு­றுத்­து­கின்றார்.

ஐக்­கிய நாடு­களின் சபையின் உலக சுகா­தார நிறு­வ­னத்தின் 2014 ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் சுமார் 600 மில்லி யன் இளவயதினர் குண்டானவர்களாகவும் மற்றும் ஏறத்தாழ 2 பில்லியன் இளவயதினர் அதிக நிறை கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களாக 374 மில்லியன் மக்கள் காணப்படுகின்றனர். இலா­பத்­தினை நோக்­காகக் கொண்ட வர்த்­தக நிறு­வ­னங்கள் மீண்டும் மீண்டும் வாடிக்­கை­யா­ளர்கள் தம்­மிடம் வரு­வ­தற்­காக தம்மால் இயன்ற அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வர் என்­பது நிச்­சயம்.

எனவே, எம்மை நாமே நாவின் ஈர்ப்­பி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வது அவ­சியம்.

சமூக வைப­வங்­க­ளிலும் உணவுத் தெரி­வு­களில் நாம் முன்­மா­தி­ரி­யாக நடந்து கொள்­வ­துடன், உடல் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு எனக் கரு­து­ப­வற்றை புறக்­க­ணிக்­கவும் தயங்­கக்­கூ­டாது. இந்­ந­ட­வ­டிக்­கை­களை நோய் வரும்­வரை காத்­தி­ருக்­காது, வருமுன் காக்க முன்­வ­ர­வேண்டும்.

அல்­லா­விடின் நோய் வந்­த­பின்னர் வைத்­தி­ய­சா­லைகள் முன்னால் நீண்ட வரி­சை­களில் காத்­தி­ருக்­க­வேண்­டி­யேற்­ப­டு­வ­துடன் வைத்­தி­யர்­களின் கண்ணியமற்ற நச்சரிப்புகளுக்கு ஆளாகவும் நேரிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply