நாசா அறிமுகம் செய்யும் முக்கோண வடிவில் பயணிகள் விமானம்

Loading...

நாசா அறிமுகம் செய்யும் முக்கோண வடிவில் பயணிகள் விமானம்எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் விமானத்தை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, போயிங் நிறுவனத்துடன் இணைந்து முதலில் எக்ஸ்-48சி என்ற மாடல் முக்கோண வடிவ விமானத்தை மட்டும் தயாரித்துள்ளது.

பின்னர் விரிவுபடுத்தப்பட்டு பல விமானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கோண விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த விமானங்களின் மாடல்களே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உளவு விமானத்தைப் போன்று உள்ள இந்த விமானத்தில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது. மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், இது காற்றை எளிதில் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல முடியும்.

எனவே இந்த விமானம் அடுத்த 15-20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், ராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று நாசா கூறியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply