நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

Loading...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவுஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்)
உணவு உட்கொண்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 80 – 120 மில்லிகிராம்.
இந்த அளவு கூடுதலாக இருப்பின், அவருக்கு நீரிழிவுநோய் உள்ளது.
நீரிழிவு நோய்க்கு ஒருவர் மருத்துவம் பெறாவிடில் பலவிதமான பிரச்சனைகள் அவரது உடலில் ஏற்படும்.


மூளையில் ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் அபாயம் (Brain Stroke).
மாரடைப்பு (Heart Attack) வருவது அதிகமாகும்.
கண்பார்வையில் குறை ஏற்படும்.
இந்தியாவின் கண்கள் பார்வையிழப்பதற்கு (மனிதர்கள் குருடாவதற்கு) முக்கிய காரணங்களில் நீரிழிவுநோய் மூன்றாவது காரணமாக அமைகிறது.
இரத்தக் கொதிப்பு – இரத்த அழுத்தம் (Blooe perssure) அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.
சிறுநீரகம் பழுதாவதற்கு கெட்டுப் போவதற்கு 17 மடங்கு அதிக வாய்ப்புண்டு.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் செயலற்றுப் போவதற்குப் பொதுவாக நீரிழிவுநோய் காரணமாக அமைகிறது.
கால்கள் உணர்ச்சியற்றுப் போகவும், நரம்புகள் பாதிப்படையவும் காரணமாக அமைகிறது.
விபத்துகள் ஏற்பட்டு கால்கள் துண்டிக்கப்படுவது (Ambutation) குறித்து நமக்குத் தெரியும்.
அதையடுத்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது நீரிழிவுநோய்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply